Homeசெய்திகள்தமிழ்நாடுதொகுதி மறுவரையறை மசோதா: நாடாளுமன்றத்தில் திமுகவின் 'செக்மேட்' மூவ்! - ஒரு விரிவான அரசியல் கணக்கீடு

தொகுதி மறுவரையறை மசோதா: நாடாளுமன்றத்தில் திமுகவின் ‘செக்மேட்’ மூவ்! – ஒரு விரிவான அரசியல் கணக்கீடு

-

- Advertisement -

மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில், தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் வகையிலான எந்தவொரு முடிவையும் திமுக தீவிரமாக எதிர்க்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அதிரடியாகத் தெரிவித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதாவின் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியச் ‘செக்மேட்’ காரணியாக திமுகவின் அரசியல் கணக்கீடு மாறியுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா: நாடாளுமன்றத்தில் திமுகவின் 'செக்மேட்' மூவ்! - ஒரு விரிவான அரசியல் கணக்கீடு​​மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை (Delimitation Bill) நிறைவேற்றுவதில், தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக எடுக்கப் போகும் நிலைப்பாடு இந்திய அரசியலில் மிக முக்கியத் திருப்பமாக மாறியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற, அவைக்கு வந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3rd  Present and Voting) பேராதரவு தேவை என்ற நிலையில், திமுக எம்பிக்களின் வாக்களிப்பு மற்றும் வெளிநடப்பு கணக்கீடுகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

மக்களவை, மாநிலங்களவையில் மசோதாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் எம்பிக்களின் எண்கணிதம் 

we-r-hiring

மக்களவை நிலவரம் (Lok Sabha Analytics)
மக்களவையின் தற்போதைய மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 540 ஆகும். மசோதா தடையின்றி நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 360 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மக்களவையில் திமுகவுக்கு 22 எம்பிக்கள் உள்ளனர். ஒருவேளை, திமுகவின் 22 எம்பிக்களும் அவையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தால், அவையின் பலம் 518 ஆகக் குறையும். அப்போது மசோதாவை நிறைவேற்ற 345 பேரின் ஆதரவு மட்டுமே போதுமானது. தற்போது பாஜக கூட்டணி வசம் உத்தேசமாக 341 எம்பிக்களின் ஆதரவு உள்ளதால், திமுக வெளிநடப்பு செய்யும் பட்சத்தில் பாஜகவுக்கு மசோதாவை நிறைவேற்ற இன்னும் 4 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படும். மற்றொரு புறம், 37 எம்பிக்களைக் கொண்டுள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, “மசோதாவை ஆய்வு செய்த பிறகே முடிவு” எனக் கூறியுள்ளது. ஒருவேளை சமாஜ்வாதி கட்சி இதற்கு ஆதரவளித்தால், திமுகவின் துணை இல்லாமலேயே மக்களவையில் இந்த மசோதா மிக எளிதாக நிறைவேறிவிடும்.தொகுதி மறுவரையறை மசோதா: நாடாளுமன்றத்தில் திமுகவின் 'செக்மேட்' மூவ்! - ஒரு விரிவான அரசியல் கணக்கீடுமாநிலங்களவை நிலவரம் (Rajya Sabha Analytics)
மக்களவையை விட மாநிலங்களவையில்தான் இந்த மசோதாவிற்கான அசல் சிக்கலும், திமுகவின் ‘பவர்ஃபுல்’ காரணியும் ஒளிந்துள்ளது. மாநிலங்களவையின் மொத்த இடங்கள் 245 என்றாலும், திரிணாமுல் காங்கிரஸின் 4 எம்பிக்கள் ராஜினாமா செய்ததால் தற்போதைய பலம் 241 ஆக உள்ளது. இதனால் மசோதா நிறைவேற 160 எம்பிக்களின் ஆதரவு கட்டாயம் தேவை. ஆனால், பாஜக கூட்டணி வசம் தற்போது 152 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர் (தேவைக்கு 8 எம்பிக்கள் குறைவு). இந்தச் சூழலில், மாநிலங்களவையில் 8 எம்பிக்களைக் கொண்டுள்ள திமுக எடுக்கக்கூடிய மூன்று நிலைப்பாடுகள் மசோதாவின் தலைவிதியை தீர்மானிக்கப் போகின்றன.

ஆதரவு அளித்தால்
பாஜகவிடம் உள்ள 152 எம்பிக்களுடன் திமுகவின் 8 எம்பிக்கள் சேரும் போது சரியாக 160 எம்பிக்கள் ஆதரவு கிடைத்து, மாநிலங்களவையில் மசோதா எளிதாக நிறைவேறிவிடும்.

எதிர்த்து வாக்களித்தால்
திமுக மசோதாவை எதிர்த்து வாக்களித்தால், பாஜக கூட்டணிக்குத் தேவையான 160 ஆதரவு கிடைக்காமல் மசோதா முற்றிலுமாகத் தோல்வி அடையும்.

வெளிநடப்பு செய்தால்
திமுகவின் 8 எம்பிக்களும் வெளிநடப்பு செய்தால், அவையின் பலம் 233 ஆகக் குறையும். அப்போது 2/3 பெரும்பான்மைக்கு 155 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும். ஆனால் பாஜக கூட்டணி வசம் 152 எம்பிக்கள் மட்டுமே உள்ளதால் (சரத் பவார் பிரிவின் 1 எம்பியையும் சேர்த்தால் 153), திமுக வெளிநடப்பு செய்தாலும் மசோதா தோல்வியையே தழுவும்.

சுருக்கமாகச் சொன்னால், மாநிலங்களவையைப் பொறுத்தவரை தொகுதி மறுவரையறை மசோதாவின் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் ‘செக்மேட்’ அதிகாரம் திமுகவிடம் மட்டுமே உள்ளது. இதனால், “தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் மாநில நலன் சார்ந்த இந்த முக்கிய விஷயத்தில் திமுக என்ன முடிவு எடுக்கப் போகிறது?” என்பதைத்தான் தற்போது இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் எந்த முடிவையும் திமுக தீவிரமாக எதிர்க்கும்! – திருச்சி சிவா எம்பி அதிரடி

MUST READ