Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் வெளிநாட்டு பல்கலைக்கழகம்: “கல்வி உரிமை, சமூக நீதிக்கு எதிரான தாக்குதல்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

தமிழ்நாட்டில் வெளிநாட்டு பல்கலைக்கழகம்: “கல்வி உரிமை, சமூக நீதிக்கு எதிரான தாக்குதல்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகமாக மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia – UWA) தனது சர்வதேச வளாகத்தை சென்னை வேளச்சேரியில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் வெளிநாட்டு பல்கலைக்கழகம்: “கல்வி உரிமை, சமூக நீதிக்கு எதிரான தாக்குதல்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

UWA-வின் சென்னை வளாகத்திற்கு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது. வேளச்சேரியில் அமைக்கப்படும் இந்த வளாகத்தில் அக்டோபர் மாதம் முதல் மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் தொடங்க உள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

“கல்வியை வணிகமயமாக்கும் நடவடிக்கை”

இந்தியாவில் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் வளாகங்களை அமைப்பதற்கு வழிவகுக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவது உயர்கல்வியை வணிகமயமாக்குவதற்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் எட்டாக்கனியாக மாறுவதற்கும் வழிவகுக்கும் என அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அரசு பல்கலைக்கழகங்களில் காலிப் பணியிடங்கள் குறித்து கேள்வி

தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அரசு உயர்கல்வி நிறுவனங்களில் போதிய அடிப்படை கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் வசதிகளை ஏற்படுத்தாமல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை வரவேற்பது ஏன் எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கட்டணங்கள் குறித்து விமர்சனம்

UWA சென்னை வளாகத்தில் வழங்கப்பட உள்ள படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் தொடர்பாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. எளிய மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு இதுபோன்ற கட்டணங்கள் சுமையாக அமையும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

அதேவேளையில், UWA சென்னை வளாகத்தில் வணிக மேலாண்மை, கணினி அறிவியல், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.பி.ஏ. உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளும் வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தல்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி உரிமை, சமூக நீதி மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான அம்சங்களை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு.. பெரம்பூர் தொகுதி வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் வாதம்!

MUST READ