Homeசெய்திகள்தமிழ்நாடுபொதுத்தேர்தலில் இருந்த ஆர்வம் இடைத்தேர்தலில் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பொதுத்தேர்தலில் இருந்த ஆர்வம் இடைத்தேர்தலில் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் பொதுத்தேர்தலைப் போல மக்கள் மத்தியில் ஆர்வம் காணப்படவில்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் மக்களிடம் சுணக்கம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.பொதுத்தேர்தலில் இருந்த ஆர்வம் இடைத்தேர்தலில் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற ‘சேவை சங்கல்ப் அபியான்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், இடைத்தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

we-r-hiring

“இடைத்தேர்தலில் மக்களுக்கு ஆர்வம் இல்லை”

பிரசாரக் காலத்தில் இடைத்தேர்தல் பரபரப்பாக இருந்தாலும், வாக்குப்பதிவு நாளில் அதே அளவிலான பரபரப்பு காணப்படவில்லை என தமிழிசை தெரிவித்தார். பொதுத்தேர்தலில் மக்கள் காட்டிய ஆர்வம் இடைத்தேர்தலில் இல்லை என்றும், மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டுமா என்ற சுணக்கம் மக்களிடம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், பதவியை ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் போட்டியிடும் தேர்தலில் அவர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்களா என்ற கேள்வியும் எழுவதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற தேர்தல்களை மக்கள் மீது திணிக்கக் கூடாது என்பதே தங்களது கருத்து என்றும் தமிழிசை கூறினார்.

“ஒருமுறையாவது வெற்றி பெற்று சேவை செய்ய முடியாதா?”

தான் உட்பட பலரும் ஒருமுறையாவது தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் காத்திருப்பதாக குறிப்பிட்ட தமிழிசை, மக்கள் வழங்கிய வாய்ப்பை விட்டுவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்படுவதை விமர்சித்தார்.

மீண்டும் இதுபோன்ற தேர்தல் சூழல் உருவாக முதலமைச்சர் ஊக்கம் அளிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பரிசுப் பொருட்கள் குறித்து விமர்சனம்

தேர்தல் காலத்தில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படும் வீடியோக்கள் வெளியாகி வருவதாகவும், அதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என விளக்கமளிப்பது போன்ற புதிய அரசியல் யுக்தி தமிழகத்தில் தற்போது உருவாகி வருவதாகவும் தமிழிசை விமர்சித்தார்.

செவிலியர்கள் கைது குறித்து கருத்து

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மனவேதனை அளிப்பதாகவும் தமிழிசை தெரிவித்தார். தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு செவிலியர்களுக்கு நன்மை செய்வோம் என கூறப்பட்ட நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சரியல்ல என்றும் அவர் கூறினார்.

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் எனவும் தமிழிசை வலியுறுத்தினார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி

திருத்தணியில் தனது மகளை கேலி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்த தந்தை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய தமிழிசை, தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது முதன்மையானதாக இருக்க வேண்டும் என்றும், விழாக்கள் மற்றும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு முன்பு மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனங்களை முன்வைத்தார். மக்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

SIR விவகாரம் குறித்தும் கருத்து

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, தேர்தல் தோல்வியின் எதிரொலியாகவே இந்தப் போராட்டம் நடைபெறுவதாக விமர்சித்தார்.

மேலும், SIR நடவடிக்கைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் தமிழ்நாட்டில் தவெகவும், கேரளாவில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனை சுட்டிக்காட்டிய அவர், SIR-க்கு எதிராக போராடுபவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு போராடட்டும் என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்த தமிழிசை, காங்கிரஸின் துரோகம் குறித்து திமுகவிடம் கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் தவெகவுக்கும் காங்கிரஸ் துரோகம் செய்யும் என்றும் தனது அரசியல் கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வெளிநாட்டு பல்கலைக்கழகம்: “கல்வி உரிமை, சமூக நீதிக்கு எதிரான தாக்குதல்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

MUST READ