தீபாவளி பண்டிகையை ஒட்டி கோவை – திண்டுக்கல் இடையே இன்று முதல் வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை தினசரி மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை – திண்டுக்கல் இடையே இன்று முதல் வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு தினசரி மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வரும் நவம்பர் 3ஆம் தேதி மட்டும் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படாது.

இன்று முதல் வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை கோவையில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் மெமு ரயில் சிறப்பு பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். மறுமார்க்கத்தில் பிற்பகல் 2 மணிக்கு திண்டுக்கல்லில் புறப்படும் மெமு சிறப்பு ரயில் மாலை 5.50 மணிக்கு கோவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு இல்லாத இந்த மெமு சிறப்பு ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நிறுத்தங்களில் ரயில் நின்று செல்லும் என்றும் சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.