spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க. - திருமாவளவன் பாராட்டு!

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க. – திருமாவளவன் பாராட்டு!

-

- Advertisement -

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க. என்றும், பேராளுமை கொண்ட தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வதாகவும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் திமுக பவளவிழா பொதுக்கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில், அமைச்சர்
தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணிகளின் தலைவர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

we-r-hiring

திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள்
தலைவர் திருமாவளவன், திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளாக வீறுகொண்டு
வெற்றி நடைபோடுவதாகவும், பெரியாரின் கொள்கை வழியில் திமுக தொடர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவித்தார். அரசியல் முதிர்ச்சி, கொள்கை முதிர்ச்சி கொண்ட கட்சி திமுக என்றும், இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடும் கட்சி திமுக என்றும் திருமாவளவன் பாராட்டு தெரிவித்தார்.

சமூக நீதி ஆட்சியை திமுக நடத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க. என்றும் குறிப்பிட்டார். மேலும்,  நாட்டுக்கே முன்னோடியான பல திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி என்றும், அவர் சுயமரியாதையை அழுத்தமாக நடைமுறை ப்படுத்தியவர் என்றும் திருமாவளவன் கூறினார். மேலும், திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என பிரகடனப்படுத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேராளுமை கொண்ட தலைவராக முதலமைச்சர் திகழ்வதாகவும் திருமாவளவன் பாராட்டு தெரிவித்தார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் திமுக தொடர் தேர்தலில் வெற்றிகளை பெற்று வருவதாகவும் திருமாவளன் தெரிவித்தார்.

கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணி கட்சிகள் செயல்பட்டு வருவதாகவும்,  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலையை உருவாக்கியது திமுக அரசு என்றும் தெரிவித்த திருமாவளன், தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வருவது அண்ணா, கலைஞர் ஆட்சி என்றும் புகழாரம் சூட்டினார். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் திணிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த அவர், இந்தியாவிலேயே மத்திய அரசுக்கு சவால் விடும் அரசாக திமுக அரசு உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், சனாதன சக்திகளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து முழங்கும் என்றும் திருமாவளன் உறுதிபட தெரிவித்தார்.

MUST READ