spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. எம்.பி.க்கு கட்சித் தலைமை நோட்டீஸ்!

தி.மு.க. எம்.பி.க்கு கட்சித் தலைமை நோட்டீஸ்!

-

- Advertisement -

 

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
Photo: DMK

திருநெல்வேலி தொகுதியின் மக்களவை உறுப்பினரான தி.மு.க.வைச் சேர்ந்த ஞானத் திரவியத்துக்கு அக்கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

we-r-hiring

பணிக்கு வராத ஊழியர்கள்… அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மணிப்பூர் அரசு!

தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ஞானத் திரவியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தி.மு.க. கட்சியின் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து மீறி செயல்படுவதாகவும், கட்சியின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், அவப்பெயர் ஏற்படுத்துவதாகவும் புகார் வந்திருக்கிறது.

இந்த புகார் குறித்து ஏழு நாட்களுக்குள் கட்சித் தலைமையிடம் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வான் பரப்புக்குள் சென்ற இண்டிகோ விமானம்!

தி.மு.க. தலைமையின் இத்தகைய அதிரடி நடவடிக்கையால், திருநெல்வேலியின் மாவட்ட நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ