spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?- திமுக எம்.பி. வில்சன்

ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?- திமுக எம்.பி. வில்சன்

-

- Advertisement -

ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?- திமுக எம்.பி. வில்சன்

ஒருவர் அமைச்சராக இருக்கலாம் இருக்கக்கூடாது என தன்னிச்சையாக கூறுவதற்கு ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என திமுக எம்.பி. வில்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Image

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி வில்சன், “ஆளுநரின் முடிவு நிராகரிக்கப்பட வேண்டியது, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. ஆளுநர் குறிப்பிட்டுள்ள அரசியல் சாசன பிரிவுகளின் படியே அவருக்கு அதிகாரமில்லை என்பது தெளிவாகிறது. இப்படியே விட்டால், நீதிபதியை பதவி நீக்கம் செய்கிறேன் எனவும் ஆளுநர் கூறுவார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக இருப்பதா? செந்தில் பாலாஜியிடம் விசாரணை மட்டுமே நடந்துவருவதால் அவரை நீக்க தேவையில்லை. ஒருவர் அமைச்சராக இருக்கலாம் இருக்கக்கூடாது என தன்னிச்சையாக கூறுவதற்கு ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது. ஆளுநர் எடுத்த நடவடிக்கையை அவரே நிறுத்தி வைத்திருக்கிறார்.

முதலமைச்சருக்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை ஆளுநர் மீறியுள்ளார். இல்லாத பூனையை இருட்டு வீட்டுக்குள் தேடுவதுபோல் ஆளுநர் செயல்படுகிறார்” எனக் கூறினார்.

MUST READ