spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் - புதிய கட்டுப்பாடு

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் – புதிய கட்டுப்பாடு

-

- Advertisement -

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் - புதிய கட்டுப்பாடு

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெற அரசு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற அரசு பதிவு பெற்ற மருத்துவரின் மருத்துவச் சான்று கட்டாயம் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளது.

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவும் இந்த நடைமுறை பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.

போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.

“தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை பயன்படுத்தி, மருத்துவச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய முடியும்” என தெரிவித்துள்ளனர்.

ஓட்டுநர் உரிமம் – தேவையான ஆவணங்கள் என்ன  ?

  • மருத்துவசான்றிதழ் படிவம் 1A (போக்குவரத்து வாகனங்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்)
  • உடல் தகுதி படிவம் 1 மற்றும் உறுதிமொழி
  • புகைப்படம்
  • வயதிற்கான அத்தாட்சி
  • முகவரிக்கான அத்தாட்சி

MUST READ