மே 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி
கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழகம் முழுவதும் தீவிர சாராய வேட்டை நடத்தப்பட்டுவருகிறது. இதனிடையே 22 பேர் மரணமடைய காரணமான விஷச்சாராயம் விற்பனை செய்த ஆலை அதிபர் இளையநம்பி, பரக்கத்துல்லா, ஏழுமலை உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான வழக்குகள் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படவுள்ளது. அப்போது எடப்பாடி பழனிசாமி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து உரிய விசாரணை நடத்துமாறு புகார் மனு வழங்க உள்ளார் .