Homeசெய்திகள்தமிழ்நாடுகல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியை சேர்ந்த தூய்மை பணியாளரின் மகளான துர்கா, தனது கடின முயற்சியின் காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுதி நகராட்சி ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிலையில், துர்கா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமுகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் துர்காவின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன்!.
கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் துர்கா எடுத்துக்காட்டு! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், நான் மீண்டும் சொல்கிறேன்…கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

 

 

MUST READ