spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரியில் மின்கட்டணம் அதிரடி உயர்வு

புதுச்சேரியில் மின்கட்டணம் அதிரடி உயர்வு

-

- Advertisement -

புதுச்சேரியில் மின்கட்டணம் அதிரடி உயர்வு

புதுச்சேரியில் வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மின்சார கொள்முதல் விலை ஏற்றத்தை ஈடு செய்யும் பொருட்டு, புதுச்சேரியில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கான இழப்பை சரி செய்ய வீடுகளுக்கு 100 யூனிட் வரை 25 பைசாவும், 101 முதல் 200 யூனிட் வரை 36 பைசாவும், 201 முதல் 30 யூனிட் வரை 59 பைசாவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

இதேபோல் வர்த்தக மின் கட்டணம் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு 66 பைசாவும், 101 முதல் 250 வரை யூனிட்டுக்கு 77 பைசாவும், 250 யூனிட்டுக்கு மேல் 79 பைசாவும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெருவிளக்கு யூனிட்டுக்கு 78 பைசா, எல்டி தொழிற்சாலை யூனிட்டுக்கு 70 பைசாவும் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எச்டி வர்த்தகம் யூனிட்டுக்கு 62 பைசா, விளம்பர பலகைகளுக்கு யூனிட்டுக்கு 59 பைசா கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ