Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக உட்கட்சி மறுசீரமைப்பு: 234 தொகுதிகளுக்கான புதிய பிரதிநிதித்துவ முறையும் ஸ்டாலினின் வியூகமும்!

திமுக உட்கட்சி மறுசீரமைப்பு: 234 தொகுதிகளுக்கான புதிய பிரதிநிதித்துவ முறையும் ஸ்டாலினின் வியூகமும்!

-

- Advertisement -

தமிழக ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), வரவிருக்கும் அரசியல் களங்களை எதிர்கொள்ளும் வகையில் தனது உட்கட்சி அமைப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ளது.திமுக உட்கட்சி மறுசீரமைப்பு: 234 தொகுதிகளுக்கான புதிய பிரதிநிதித்துவ முறையும் ஸ்டாலினின் வியூகமும்!

வயது வரம்பு மற்றும் நிர்வாகப் பரவலாக்கம்
கட்சியின் புதிய கொள்கைகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்படுகிறது. மேலும், நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில், இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற புதிய கட்டமைப்பு அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஒரே நபரிடம் பல ஆண்டுகளாகக் குவிக் கப்பட்டிருந்த அதிகாரம் பரவலாக்கப்பட்டு, இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும், இளைஞர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் அதிக வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

மூத்த நிர்வாகிகளின் அனுபவமும் சவால்களும்
இந்த மறுசீரமைப்பின் பகுதியாக 13 மூத்த மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் நீண்டகால உழைப்பும் களப்பணி அனுபவமும் வீணடிக்கப்படாது எனத் தெரிகிறது. மாற்றப்படும் சீனியர்களைக் கட்சியின் தலைமை அமைப்புகளிலும், கொள்கைப் பரப்புப் பணிகளிலும் முக்கியப் பொறுப்புகளில் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

234 தொகுதிகளிலும் சமூகப் பிரதிநிதித்துவம்
இந்த மறுசீரமைப்பின் மிக முக்கிய அம்சமாக அனைத்துச் சமூகத்தினருக்குமான சுழற்சி முறைப் பிரதிநிதித்துவம் பார்க்கப்படுகிறது:

  • சமூகப் பங்களிப்பு: தலித், அருந்ததியர், தேவேந்திர குல வேளாளர், முத்தரையர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் மக்கட்தொகை அடைப்படையில் உரிய முக்கியத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  • பெண்களுக்கு வாய்ப்பு: உள்ளாட்சி அமைப்புகளில் இளம் தலைவர்கள் ஜொலித்து வரும் நிலையில், மாவட்டச் செயலாளர் போன்ற முதன்மை அதிகாரப் பொறுப்புகளிலும் பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  • அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல்: சௌராஷ்டிரா, நாடார், ஆசாரி, குயவர் போன்ற எண்ணிக்கையில் குறைவான சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதன் மூலம் உண்மையான சமூக நீதியை உறுதி செய்யத் தலைமை திட்டமிட்டுள்ளது.

உட்கட்சி அதிருப்திகளைக் களைந்து, புதிய அரசியல் சூழலுக்கு ஏற்ப அமைப்பை வலுவாக்கும் முயற்சியாக ஸ்டாலினின் இந்த நகர்வு பார்க்கப்படுகிறது. இந்த மறுசீரமைப்பு திமுகவிற்குப் புதிய ரத்தம் பாய்ச்சி, தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“ஒரே பதவியில் 2 முறை மட்டுமே!..” திமுகவில் பாய்கிறது புதிய விதிமுறை!.. தலைவரின் அதிரடி உத்தரவு!

MUST READ