Homeசெய்திகள்தமிழ்நாடு"வெற்றித் தலைநகரம் சென்னை!.." உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு நகரமாக உயர்த்துவோம்: சென்னை நாளில் முதல்வர் விஜய்...

“வெற்றித் தலைநகரம் சென்னை!..” உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு நகரமாக உயர்த்துவோம்: சென்னை நாளில் முதல்வர் விஜய் உறுதி!

-

- Advertisement -

தமிழகத்தின் தலைநகரமும், வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகரமுமான சென்னை உருவாக்கப்பட்டு 387 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் ‘சென்னை நாள்’ (Madras Day) விழாவை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்."வெற்றித் தலைநகரம் சென்னை!.." உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு நகரமாக உயர்த்துவோம்: சென்னை நாளில் முதல்வர் விஜய் உறுதி!

வரலாறும் வளர்ச்சியும் இணைந்த நகரம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில், அனைவருக்கும் எனது இனிய ‘சென்னை நாள்’ நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

மேலும், சென்னை மாநகரத்தின் சிறப்புகளைக் சுட்டிக்காட்டிய அவர், “சென்னை நகரத்தின் தொன்மையான வரலாற்றுப் பெருமையையும், தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாப்போம். அதேவேளையில், நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக (Smart City) சென்னையை மேலும் உயர்த்துவோம்” என உறுதியேற்றுள்ளார்.

“வளரட்டும் சென்னைப் பெருநகரம்”
மாநிலத்தின் பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார மையமாக விளங்கும் சென்னையை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், “வளரட்டும் சென்னைப் பெருநகரம்” என்ற முழக்கத்துடன் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இந்த வாழ்த்துச் செய்தி, சென்னை மக்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இடதுசாரி மாணவர் மீதான தாக்குதல்: மதுரை முனிச்சாலையில் சு.வெங்கடேசன் எம்.பி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

MUST READ