திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா பகுதியில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு கணக்கெடுப்புப் பணிகள் குறித்து உரிய விளக்கம் அளிக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு குறித்த சந்தேகங்கள்
குஜிலியம்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் நிலங்கள், குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் குறித்துத் தொடர்ச்சியாகக் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தக் கணக்கெடுப்பு எதற்காக நடத்தப்படுகிறது, இதன் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கவுள்ள நன்மைகள் அல்லது பாதிப்புகள் என்ன என்பது குறித்து அரசு நிர்வாகம் தரப்பில் தெளிவான தகவல்கள் எதுவும் மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வட்டாட்சியரிடம் விளக்கம் கோரிக்கை
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், “பொதுமக்களிடம் நடத்தப்படும் கணக்கெடுப்பின் நோக்கம் மற்றும் அதன் பின்னணி குறித்து வட்டாட்சியர் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். மக்களிடையே நிலவும் சந்தேகங்களையும் அச்சத்தையும் போக்க அரசு நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் சார்ந்த இந்த விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம், குஜிலியம்பாறை வட்டார அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் த.வெ.க அரசு மீது சிபிஎம் பாய்ச்சல்: தலைமைச் செயலாளரை தூக்கக் கோரி பெ.சண்முகம் ஆவேசம்!
