Homeசெய்திகள்தமிழ்நாடுமதுபானங்கள் மீது ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’: சட்டப்பேரவையில் புதிய வரி சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

மதுபானங்கள் மீது ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’: சட்டப்பேரவையில் புதிய வரி சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

-

- Advertisement -

டாஸ்மாக் மதுபானங்களின் விலை மீண்டும் உயர்கிறது, கூடுதலாகக் கிடைக்கும் நிதி, போதை மறுவாழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என அரசு அறிவிப்பு!

மதுபானங்கள் மீது ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’: சட்டப்பேரவையில் புதிய வரி சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

we-r-hiring

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும், சமூகப் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் பொருட்டும், மதுபானங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியில் (VAT) ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’ என்ற புதிய வரியைச் சேர்ப்பதற்கான சட்டமுன்மொழிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாட் (VAT) வரி உயர்த்த அனுமதி:
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்திருத்த முன்மொழிவின் மூலம், தற்போது நடைமுறையில் உள்ள மதிப்புக் கூட்டு வரி விகிதத்தை (VAT) அரசு மேலும் உயர்த்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வரி சேர்க்கப்படுவதன் மூலம், மாநிலத்தின் நிதி வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுபானங்கள் விலை உயர்வு:
அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய வரிமுறையின் காரணமாக, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மதுபானங்களின் விலையும் மீண்டும் உயரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

கூடுதல் நிதி எதுக்குப் பயன்படுத்தப்படும்?
வரி உயர்வு குறித்த காரணங்களை விளக்கிய அரசுத் தரப்பு, “இந்த புதிய தீர்வை (Cess) மூலம் அரசுக்குக் கூடுதலாகக் கிடைக்கும் நிதியானது, போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையங்களை அமைத்தல், போதை விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்வது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சார்ந்த பணிகளுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் வருவாயைப் பெருக்கவும், போதை மறுவாழ்வு மையங்களுக்கு நிதி திரட்டவும் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை, சட்டப்பேரவையிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்: அமைச்சர் ஆதவ் vs உதயநிதி மோதல்! முதல்வர் விஜயின் ரியாக்‌ஷன் என்ன?

MUST READ