சட்டப்பேரவை கூட்டத்தொடரைக் சுட்டிக்காட்டி ஒத்திவைக்க விஜய் தரப்பு மனு… விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தது செங்கல்பட்டு நீதிமன்றம்!
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என்று சங்கீதா வைத்த கோரிக்கையை ஏற்று விசாரணையை பிற்பகலுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சட்டப்பேரவையைக் சுட்டிக்காட்டிய விஜய் தரப்பு
இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஒரு முக்கியக் கோரிக்கையை முன்வைத்தனர். “தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் சட்டமன்றப் பணிகளில் பிஸியாக இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்.” என்று மனுத்தாக்கல் செய்து கோரிக்கை விடுத்தனர்.
வீடியோ காலில் ஆஜராகி சங்கீதா அதிரடி
அதேவேளையில், வழக்கில் காணொலிக் காட்சி (Video Conference) மூலமாக வெளிநாட்டிலிருந்து நேரடியாக ஆஜரான சங்கீதா விஜய் தரப்பு, இந்த கோரிக்கைக்குக் கடும் ஆட்சேபனை தெரிவித்தது. சங்கீதா தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில். “வழக்கை மேலும் தள்ளிப்போடக் கூடாது. ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த விசாரணையை இன்றே நடத்த வேண்டும்!” என்று உறுதியாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு & பிற்பகல் விசாரணை
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி, சங்கீதா தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைக்க மறுத்துவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை இன்றே நடத்துவதற்காக வழக்கை பிற்பகல் வேளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். சட்டப்பேரவை தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், முதலமைச்சர் விஜய்யின் விவாகரத்து வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வரவுள்ளது நீதிமன்ற வளாகத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘‘ஒரேயொரு கேள்வி கேக்றேன்.. ’’ – சட்டப்பேரவையில் நெருப்பை கக்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
