Homeசெய்திகள்தமிழ்நாடு"60 நாட்களில் ரூ.22,000 கோடி கடன் வாங்கியது ஏன்?" - திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு காட்டமான...

“60 நாட்களில் ரூ.22,000 கோடி கடன் வாங்கியது ஏன்?” – திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு காட்டமான பதில்!

-

- Advertisement -

தமிழகக் கடன் சுமை: பேரவையில் நிதியமைச்சர் – திமுக இடையே காரசார விவாதம்!"60 நாட்களில் ரூ.22,000 கோடி கடன் வாங்கியது ஏன்?" - திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு காட்டமான பதில்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மாநிலத்தின் கடன் சுமை குறித்து நிதியமைச்சருக்கும் முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான கே.என்.நேருவுக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது.

we-r-hiring

“தனிநபர் கடன் ரூ.1.28 லட்சம்” – நிதியமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு!
பேரவையில் உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், முந்தைய ஆட்சியின் நிதி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “கடந்த ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் நிதி நிலைமை முற்றிலும் சீர்குலைக்கப்பட்டு, கடன் சுமை பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தனிநபர் மீதும் சுமார் ரூ.1.28 லட்சம் கடன் சுமையை சுமத்திவிட்டுச் சென்றுள்ளீர்கள்” என்று குற்றம்சாட்டினார்.

திமுகவின் அதிரடி பதில்
நிதியமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டிற்குப் பதிலடி கொடுத்துப் பேசிய திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு, தற்போதைய அரசின் கடன் வாங்கும் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டினார். “நீங்கள் ஆட்சிக்கு வந்த குறுகிய காலமான 60 நாட்களிலேயே ரூ.22,000 கோடி கடன் வாங்கியிருக்கிறீர்கள். இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் மாநிலத்தின் கடனைக் குறைக்க முடியாது என்பதுதான் உண்மை. கடன் வாங்காமல் ஒரு அரசை நடத்தவே முடியாது என்று வேறு யாரும் கூறவில்லை; உங்கள் நிதித்துறைச் செயலாளரே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாகக் கூறியுள்ளாரே?” என்று கேள்வி எழுப்பினார். மாநிலத்தின் கடன் மேலாண்மை மற்றும் நிதிச் சூழல் குறித்து இருதரப்பும் காரசாரமான வாதங்களை முன்வைத்ததால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

“ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடன் வைத்து சென்றது திமுக”: சட்டப்பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் காரசார பதிலடி!

MUST READ