எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் (82 ) பெங்களூருவில் காலமானார். முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராக பணியாற்றியவர் முரசொலி செல்வம்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சகோதரி மகனும், முரசொலி மாறனின் தம்பியும் ஆவார் முரசொலி செல்வம். பல்வேறு தமிழ் திரைப்படங்களையும் தயாரித்தவர் முரசொலி செல்வம்.
முரசொலி நாளிதழுடன் 50 ஆண்டுகள் தொடர்பு கொண்டிருந்தவர் முரசொலி செல்வம். முரசொலியில் சிலந்தி எனும் பகுதியை எழுதி வந்தவர் முரசொலி செல்வம். பெங்களூருவில் இருந்து முரசொலி செல்வம் உடல் இன்று பிற்பகல் சென்னை கொண்டு வரப்பட உள்ளது.
பெங்களூருவில் இருந்து முரசொலி செல்வத்தின் உடல் -சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை கொண்டு வரப்படும் முரசொலி செல்வத்தின் உடல், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.