Homeசெய்திகள்தமிழ்நாடுசாமந்தி பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் வேதனை!

சாமந்தி பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் வேதனை!

-

 

சாமந்தி பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் வேதனை!
தருமபுரி மாவட்டத்தில் சாமந்தி பூக்கள் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருந்துகின்றனர்.

அட்லியின் ஜவான் படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாமந்தி பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றன. இதில் வெள்ளை சாமந்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் உழவர் சந்தைகள் மற்றும் பூ மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாமந்தி நடவுச் செய்வதற்கு ஏக்கருக்கு 50,000 ரூபாயும், பராமரிப்பதற்கு 1 லட்சம் ரூபாயும் செலவாவதாகக் கூறும் விவசாயிகள், சாமந்தி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

ரணம் படத்திலிருந்து அடுத்த பாடல் வெளியீடு

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கிணற்றில் தண்ணீர் இல்லாததால் ஒரு டேங்கர் லாரி தண்ணீர் 1,000 ரூபாய்க்கு வாங்கி பூ செடிகள் மீது பாய்ச்சி வருவதாகக் கூறும் விவசாயிகள் விலை தொடர்ந்து குறைவாகவே இருந்தால் பூ செடிகளை அழிக்கும் சூழல் ஏற்படும் என வேதனை தெரிவித்துள்ளனர்.

MUST READ