Homeசெய்திகள்தமிழ்நாடுசேலை, வாழைப்பழம், நாமக்கட்டி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு

சேலை, வாழைப்பழம், நாமக்கட்டி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு

-

சேலை, வாழைப்பழம், நாமக்கட்டி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு

திருநெல்வேலி மாவட்டம் வீரமா நல்லார் செடிபுட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகிய மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

saree

திருநெல்வேலி மாவட்டம் வீரமாநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி கூறினார்.

புவிசார் குறியீடு என்பது என்ன? அதனால் என்ன பயன்?

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 58 பொருட்களுக்கு புவிசார் கிடைத்துள்ளது நாட்டிலேயே அதிக அளவில் புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் தமிழகம் தான். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 17 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் மணப்பாறை முறுக்கு, மானாமதுரை மண்பாண்டங்கள், மார்தாண்டம் தேன், மயிலாடு கற்சிற்பம், ஊட்டி வறுக்கி, ஆத்தூர் வெற்றிலை, சேலம் ஜவ்வரிசி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தன. இந்தியாவிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது குறிப்பிடதக்கது.

 

MUST READ