- Advertisement -
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து சவரன் ரூ.50,640க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்த்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.50,640க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து, ரூ.6330-க்கு வர்த்தகமாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமின்றி கிராம் ரூ.87-க்கும், பார் வெள்ளி கிலோ ரூ.87 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.