Homeசெய்திகள்தமிழ்நாடுஇருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாக அமையட்டும்! – முதலமைச்சர் ஜோசப் விஜய் தீபாவளி வாழ்த்து...

இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாக அமையட்டும்! – முதலமைச்சர் ஜோசப் விஜய் தீபாவளி வாழ்த்து வீடியோ வெளியீடு

-

- Advertisement -

தீபாவளித் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாக அமையட்டும்! – முதலமைச்சர் ஜோசப் விஜய் தீபாவளி வாழ்த்து வீடியோ வெளியீடு

அந்த வாழ்த்துச் செய்தியில், “மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மேலும், இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பண்டிகையைப் பாதுகாப்போடும் மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும் மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்” என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகளில் அரசுப் பேருந்துகள் நிற்கும் உணவகங்களுக்கு இ-டெண்டர் வெளியீடு – கழிப்பறை முதல் உணவு வரை புதிய கட்டுப்பாடுகள்!

MUST READ