Homeசெய்திகள்தமிழ்நாடுஆவடி நூலகத்தில் போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணி பெயரில் புத்தகம் – மீண்டும் சர்ச்சை!

ஆவடி நூலகத்தில் போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணி பெயரில் புத்தகம் – மீண்டும் சர்ச்சை!

-

- Advertisement -

தமிழகத்தில் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் போலி புத்தகங்கள் இடம்பெற்றதாக எழுந்த சர்ச்சை தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், ஆவடி நூலகத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி பெயரில் புத்தகம் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி நூலகத்தில் போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணி பெயரில் புத்தகம் – மீண்டும் சர்ச்சை!

ஆவடி நூலகத்தில் உள்ள புத்தகங்களில், ஜெம் வீரமணி எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பயணங்கள் பாடங்கள் என்ற தலைப்பிலான புத்தகம் இடம்பெற்றுள்ளது. போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரின் பெயரில் நூலகத்தில் புத்தகம் இருப்பது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

we-r-hiring

ஏற்கனவே நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் போலி புத்தகங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஆவடி நூலகத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் புத்தகம் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இந்தப் புத்தகம் நூலகத்தில் எப்போது சேர்க்கப்பட்டது, அதன் கொள்முதல் மற்றும் தேர்வு நடைமுறைகள் என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது – ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!

MUST READ