Homeசெய்திகள்தமிழ்நாடுகுரியன் ஜோசப் குழு கலைக்கப்பட்டது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்; உறுப்பினர் ராஜினாமா செய்ததால்...

குரியன் ஜோசப் குழு கலைக்கப்பட்டது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்; உறுப்பினர் ராஜினாமா செய்ததால் புதிய சட்ட ஆணையம் அமைப்பு!

-

- Advertisement -

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.குரியன் ஜோசப் குழு கலைக்கப்பட்டது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்; உறுப்பினர் ராஜினாமா செய்ததால் புதிய சட்ட ஆணையம் அமைப்பு!

அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களில் ஒருவர் கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து, நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையில் புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சையைத் திசைதிருப்புவதற்காகவே ஸ்டாலின் வேறு ஏதாவது ஒரு விவகாரத்தைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.

குரியன் ஜோசப் தலைமையிலான குழுவைக் கலைத்த அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதற்கான காரணங்களை விளக்கி அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவைக் கலைத்த தவெக அரசுக்கு எஸ்டிபிஐ கடும் கண்டனம்!

MUST READ