ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களின் சுயாட்சி உரிமைகள், நிதிப் பங்கீடு மற்றும் ஆளுநர்களின் தன்னிச்சையான செயல்பாடுகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை ஆராய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவைத் தமிழ்நாட்டின் தற்போதைய தவெக அரசு கலைத்துள்ளது. இதற்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள கருத்தில், உயர்நிலைக் குழுவைக் கலைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மாநிலங்களின் சுயாட்சி உரிமைகள், நிதிப் பங்கீடு மற்றும் ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு போன்ற முக்கிய அம்சங்களை ஆராய அமைக்கப்பட்ட குழுவைக் கலைத்துள்ள அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்றும் எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது.
