தமிழ்த் திரையுலகில் நிலவி வரும் பல்வேறு சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஒரு நாளைக்கு 6 திரைப்படக் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், தினசரி 6 காட்சிகளுக்கு அனுமதி வழங்குவது மக்களின் உழைப்பையும் உற்பத்தித் திறனையும் பாதிக்கும் வகையில் அமையக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த அரசாணையை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த் திரையுலகம் சந்தித்து வரும் பிரச்சினைகளை வெறும் காட்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது அல்லது அதிகரிப்பது என்ற கோணத்தில் மட்டும் அணுகாமல், திரைத்துறையினர் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களையும் ஆராய்ந்து உரிய தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
