பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதல் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம்தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுகவை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “குடிப்பதை ஊக்குவித்து பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று ஊழல் செய்தவர்கள், இன்று படிப்பதிலும் புத்தகம் வாங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, தற்போது எழுந்துள்ள புத்தகக் கொள்முதல் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கும் உரிமை கொண்டாடுமா என்றும், இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், தமிழிசை சௌந்தரராஜனின் இந்த விமர்சனமும் அரசியல் விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
