Homeசெய்திகள்தமிழ்நாடுபெரியார் பெயரிலேயே ஊழல்” – பெரியார் அறிவுலக விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் கடும் விமர்சனம்!

பெரியார் பெயரிலேயே ஊழல்” – பெரியார் அறிவுலக விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் கடும் விமர்சனம்!

-

- Advertisement -

பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் திமுகவை விமர்சித்துள்ளார்.பெரியார் பெயரிலேயே ஊழல்” – பெரியார் அறிவுலக விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் கடும் விமர்சனம்!

பெரியார் பெயரிலேயே திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், பெரியார் நூலகத்தை தாங்களே கட்டியதாக உரிமை கொண்டாடியவர்கள் தற்போது எழுந்துள்ள முறைகேடு குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மேலும், திமுக ஆட்சியில் எந்தப் பணிகள் நடைபெற்றாலும் அவற்றில் ஊழலும் கமிஷனும் இடம்பெறுவதாகத் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகம் தொடர்பாகவும் விசாரணை நடத்தினால் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையை மையமாகக் கொண்டு சிந்தை தளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் அமைச்சர் நிர்மல்குமார் இத்தகைய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், நிர்மல்குமாரின் இந்தக் குற்றச்சாட்டுகளும் அரசியல் விவாதத்தில் கவனம் பெற்றுள்ளன.

குடிப்பதை ஊக்குவித்து பாட்டிலுக்கு ரூ.10 என ஊழல் செய்தவர்கள், இன்று படிப்பதிலும் புத்தகம் வாங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார்கள்!” – பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

MUST READ