Homeசெய்திகள்தமிழ்நாடு‘ஆசிரியர் திரிஷா விஜய்..’ ‘இதுவரை தமிழர்கள் அறியாத வரலாறு..’- ‘பெரியார் அறிவுலகம்’ மெகா ஊழலில் பகீர்...

‘ஆசிரியர் திரிஷா விஜய்..’ ‘இதுவரை தமிழர்கள் அறியாத வரலாறு..’- ‘பெரியார் அறிவுலகம்’ மெகா ஊழலில் பகீர் தகவல்..

-

- Advertisement -

‘ஆசிரியர் திரிஷா விஜய்..’ ‘இதுவரை தமிழர்கள் அறியாத வரலாறு..’- ‘பெரியார் அறிவுலகம்’ மெகா ஊழலில் பகீர் தகவல்..
கோவை ‘பெரியார் அறிவுலகம்’ நூல் கொள்முதலில் கோடிக்கணக்கில் மெகா ஊழல் செய்யப்பட்டுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பகீர் குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளார்.

போலிப் பதிப்பகங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட தரவுகள் என நூலகம் முழுவதுமே போலிப் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

we-r-hiring

கோவையில் கடந்த திமுக ஆட்சியில் சுமார் ₹300 கோடி செலவில் கட்டப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்ட நவீன நூலகமான ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகப் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது தமிழக அரசியல் களத்திலும், இலக்கிய வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆசிரியர் திரிஷா விஜய்..’ ‘இதுவரை தமிழர்கள் அறியாத வரலாறு..’- ‘பெரியார் அறிவுலகம்’ மெகா ஊழலில் பகீர் தகவல்..

கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்ட அதிர்ச்சித் தகவல்கள்:

பெரியார் அறிவுலக நூலகத்தின் நான்காம் தளத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ் நூல்களை ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்:

கற்பனைப் பதிப்பகங்கள்: யாரும் கேள்வியே பட்டிராத ‘அகல் விளக்கு’ மற்றும் ‘பீனிக்ஸ்’ போன்ற புதிய பதிப்பகங்கள் இந்த நூலகத்திற்கு விநியோகிப்பதற்காகவே பிரத்யேகமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஒற்றைப் பதிப்பகத்தின் கீழ் மட்டும் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட கெட்டி அட்டைப் புத்தகங்கள் அலமாரிகளை அலங்கரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‘ஆசிரியர் திரிஷா விஜய்..’ ‘இதுவரை தமிழர்கள் அறியாத வரலாறு..’- ‘பெரியார் அறிவுலகம்’ மெகா ஊழலில் பகீர் தகவல்..

வானளாவிய விலை மோசடி: மற்ற பதிப்பகங்களில் ₹350 வரை விற்கப்படும் முந்நூறு பக்க நூல்கள், இந்த நூலகத்திற்காக பல மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ.1,445 வரை விலை நிர்ணயம் செய்து வாங்கப்பட்டுள்ளன.

அகல்விளக்கு பதிப்பகமும்; ஆசிரியர் பெயர்களும்: ‘அகல்விளக்கு’ என்கிற பெயரில் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அப்படியொரு பதிப்பகம் இல்லை எனக்குறிப்பிட்டுள்ள அவர், இத்தனைக் காலம் தமிழர்கள் அறியாத வரலாற்றை எழுதிய அந்த ஆசிரியர்களின் பெயர்கள் ஜோதி சரவணன், ஜோதி ஹரிஹரன், ஜோதிலட்சுமி அன்பழகன், நிவேதா அன்பழகன், தாமரை பன்னீர், ராணி பன்னீர், தாமரை கார்த்தி, தாமரை சிவா, தாமரை முரளி, சூர்யா பாலு, மங்களேஸ்வரி பாலு, விஜய பாலு, விஜய ஆதித்தன், திரிஷா விஜய், பிருந்தா சேதுராமன், மனிஷா சரவணன், மனிஷா தினேஷ், திவ்யா தினேஷ் என இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

‘ஆசிரியர் திரிஷா விஜய்..’ ‘இதுவரை தமிழர்கள் அறியாத வரலாறு..’- ‘பெரியார் அறிவுலகம்’ மெகா ஊழலில் பகீர் தகவல்..AI மூலம் உருவாக்கப்பட்ட போலித் தரவுகள்: தொழில்நுட்பம் சரியாக மேம்படுத்தப்படாத செய்யறிவு (AI) கருவிகள் மூலம் அவசரமாக உருவாக்கப்பட்டது போல் இந்நூல்கள் உள்ளன. நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களின் பெயர்கள் கற்பனையான பொய்ப்பெயர்களாகவும், அச்சிடப்பட்டுள்ள ‘பன்னாட்டுத் தரப் புத்தக எண்கள்’ (ISBN) அனைத்தும் இணையத்தில் கிடைக்காத போலி எண்களாகவும் உள்ளன.

வரலாற்றுப் பிழைகள்: குறிப்பாக, ‘மதுரைக் காஞ்சி ஒரு இலக்கியப் பயணம்’ என்ற நூலில் மதுரைக் கூழத்திப் பெருவழுதி என்ற கற்பனை அரசர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதும், நூல்களில் உள்ள வரலாற்றுத் தரவுகள் முற்றிலும் தவறாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஆசிரியர் திரிஷா விஜய்..’ ‘இதுவரை தமிழர்கள் அறியாத வரலாறு..’- ‘பெரியார் அறிவுலகம்’ மெகா ஊழலில் பகீர் தகவல்..

உடனடி நடவடிக்கை தேவை:

கோடிக்கணக்கில் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இந்த ஊழல் அரேங்கேறியுள்ளதாகத் தெரிவித்துள்ள பெருமாள் முருகன், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும், போலிப் புத்தகங்களை விநியோகித்தவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், முறைகேடாக வாங்கப்பட்ட அந்தப் போலி நூல்களை உடனடியாக நூலக அலமாரிகளில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ