Homeசெய்திகள்தமிழ்நாடு2028 கும்பகோணம் மகாமகம்: 1.25 கோடி பக்தர்கள் வர வாய்ப்பு! தெற்கு ரயில்வே சார்பில் தீவிர...

2028 கும்பகோணம் மகாமகம்: 1.25 கோடி பக்தர்கள் வர வாய்ப்பு! தெற்கு ரயில்வே சார்பில் தீவிர முன்னேற்பாடுகள்!

-

- Advertisement -

கும்பகோண்டம் மகாமகம்

வரும் 2028-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கும்பகோணத்தில் நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற மகாமகப் பெருவிழாவிற்கு சுமார் 1 கோடியே 25 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

கும்பகோணம் மகாமகப் பெருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ் மாதமான மாசி மாதம் மக நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிவரும் நன்னாளில் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நடைபெறும் மிகச்சிறந்த ஆன்மீக விழாவாகும். இது ‘தென்னகத்தின் கும்பமேளா’ என்று அழைக்கப்படுகிறது. அந்தவகையில் அடுத்த மகாமகம் 2028-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று மகாமகப் பெருவிழா நடைபெறுகிறது.

உலகப் புகழ்பெற்ற மகாமகப் பெருவிழாவிற்கு சுமார் 1 கோடியே 25 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்வார்கள் என்பதால், பயணிகளின் வசதிக்காகக் கும்பகோணம் ரயில் நிலையத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தென்னக ரயில்வே பொது மேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.
கும்பகோணம் மகாமகம் 2028

ரயில்வே பொது மேலாளர் அளித்த முக்கியத் தகவல்கள்:

  • 6 நடைமேடைகளாக மாற்றம்: தற்போது கும்பகோணம் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில், பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கையாள அவை 6 நடைமேடைகளாக (Platforms) விரிவாக்கம் செய்யப்படும்.

  • இரட்டை வழி ரயில் பாதை: மகாமக விழாவிற்குள் தஞ்சாவூர் – விழுப்புரம் இடையே முழுமையாக இரட்டைப் பாதை அமைக்கச் சாத்தியமில்லை. இருப்பினும், நெரிசலைக் குறைக்க சுந்தரபெருமாள் கோவில் முதல் ஆடுதுறை வரை 25 கிலோமீட்டர் தொலைவிற்கு இரட்டை வழி ரயில் பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

  • காலக்கெடு நிர்ணயம்: கும்பகோணம் ரயில் நிலையத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் மகாமகப் பெருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே முழுமையாக முடிவடையும்.

உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு:

மகாமகத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்துக் கும்பகோணம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் சுப்பாராவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் ரயில்வே துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

MUST READ