Homeசெய்திகள்தமிழ்நாடுபெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு? சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு? சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

-

- Advertisement -

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான நூல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது.பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு? சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தின் முக்கியமான அறிவுசார் முன்னெடுப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் கோவை பெரியார் அறிவுலகம், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய்யால் திறந்து வைக்கப்பட்டது.

we-r-hiring

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில், ஏழு ஏக்கர் பரப்பளவில் ஏழு தளங்களுடன் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நூலகத்திற்கான நூல்களைத் தேர்வு செய்வதிலும், கொள்முதல் செய்வதிலும் அரசு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளது.

அரசுப் பணத்தை முறையற்ற வழிகளில் செலவிட்டு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார்கள் கவலை அளிப்பதாகவும், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டிய நூலகத்தில் தரமற்ற மற்றும் அறிவுக்கு ஒவ்வாத உள்ளடக்கங்களைக் கொண்ட நூல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், நூல்களைத் தேர்வு செய்யப் பரிந்துரைத்த குழுவில் இடம்பெற்றவர்கள் யார், தரமற்றதாகக் கூறப்படும் நூல்களை வாங்குவதற்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டது, இந்த முறைகேடுகளுக்குத் துணைபோனவர்கள் யார், எப்போது ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது, எப்போது நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன என்பன உள்ளிட்ட கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும் என்றும், தமிழ் அறிஞர்கள் இடம்பெறும் குழுவை உடனடியாக அமைத்து பெரியார் அறிவுலக நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஆய்வில் போலியானவை என உறுதிப்படுத்தப்படும் நூல்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், நூல் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

அரசு நூலகங்களுக்கான நூல் கொள்முதலில் அரசின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும் என கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

போதைப் பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா? முதல்வருக்கு இது அழகல்ல – டிடிவி தினகரன்!

MUST READ