Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக மீது பழி போடுவதில் தோல்வியடைந்துவிட்டீர்கள் முதலமைச்சர் விஜய் அவர்களே!” – பெரியார் அறிவுலகம் புத்தகக்...

திமுக மீது பழி போடுவதில் தோல்வியடைந்துவிட்டீர்கள் முதலமைச்சர் விஜய் அவர்களே!” – பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் தவெக அரசுக்கு பரந்தாமன் சரமாரி கேள்வி!

-

- Advertisement -

பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசையும் முதலமைச்சர் விஜயையும் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.திமுக மீது பழி போடுவதில் தோல்வியடைந்துவிட்டீர்கள் முதலமைச்சர் விஜய் அவர்களே!” – பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் தவெக அரசுக்கு பரந்தாமன் சரமாரி கேள்வி!

இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகனுக்குத் தைரியம் இருந்தால், புத்தகங்களுக்கான பணம் எந்தத் தேதியில் பரிவர்த்தனை செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரத்தைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

we-r-hiring

மேலும், அரசிடம் உள்ள ஆவணங்களை மறைத்துவிட்டு போலியான ஆவணங்களை வெளியிடுவதாகக் குற்றம்சாட்டிய பரந்தாமன், அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

குறிப்பாக, ‘திரிஷா விஜய்’ என்ற எழுத்தாளரின் பெயரில் புத்தகங்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டில் யாரும், குறிப்பாக திமுகவினர், அத்தகைய புத்தகங்களை வாங்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அந்தப் புத்தகங்கள் முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி சீல் வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மார்ச் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் தொடர்பாக எந்தச் சர்ச்சையும் எழாத நிலையில், ஜூன் 22ஆம் தேதி வந்த புத்தகங்கள் தொடர்பாக மட்டும் தற்போது சர்ச்சை எழுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவறான புத்தகங்கள் இருப்பது தெரியவந்தும் அவற்றைத் திரும்பப் பெற ஏன் இன்னும் உத்தரவு பிறப்பிக்கவில்லை, புத்தகங்களைக் கொள்முதல் செய்தது யார், எப்போது கொள்முதல் செய்யப்பட்டது என்ற விவரங்களை ஏன் அரசு இதுவரை வெளியிடவில்லை என்றும் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் திமுக மீது பழி சுமத்தும் முயற்சியில் முதலமைச்சர் தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் சர்ச்சை: நியாயமான விசாரணை நடத்த வேண்டும்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தல்!

MUST READ