Homeசெய்திகள்தமிழ்நாடுபெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் சர்ச்சை: நியாயமான விசாரணை நடத்த வேண்டும்! – இந்திய...

பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் சர்ச்சை: நியாயமான விசாரணை நடத்த வேண்டும்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தல்!

-

- Advertisement -

நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரம், விலைவாசி உயர்வு மற்றும் மாநில உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்துத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் விவகாரம்!

தந்தை பெரியாரின் சுயமரியாதை மற்றும் சமத்துவக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் வரவேற்கத்தக்க முயற்சி என வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இந்த நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளதாகச் சிறந்த எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விவகாரத்தில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

புத்தகக் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்!

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி குறித்தும் வீரபாண்டியன் கவலை தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில், பால், பிஸ்கட், மருந்துகள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் 100 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எந்தச் சூழலிலும் உயரக்கூடாது என்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.

தற்போதைய ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பதுக்கல், கலப்படம், கள்ளச்சந்தை ஆகியவற்றைக் கடுமையாகக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குரியன் ஜோசப் குழு கலைப்புக்கு எதிர்ப்பு!

ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான குழு கலைக்கப்பட்டதற்கும் வீரபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியா என்பது ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தைக் கொண்ட நாடு அல்ல என்றும், பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்கள் இணைந்த கூட்டாட்சி நாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், அதிகாரங்களை முறையாகப் பகிர்ந்தளிப்பதும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அவசியமானவை எனத் தெரிவித்த அவர், மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைத்து ஒன்றிய அரசிடம் அதிகாரத்தைக் குவிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் விமர்சித்துள்ளார்.

மாநிலங்களின் நலன் என்பது இந்திய நாட்டின் ஒட்டுமொத்த நலனுடன் தொடர்புடையது என்பதால், மாநில உரிமைகள் தொடர்பான விவாதங்களுக்கும் ஆய்வுகளுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

மாநில உரிமைகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவைக் கலைத்திருப்பது கண்டனத்திற்குரியது” – மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா!

MUST READ