Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியாவிலேயே முதன்முறையாக AI மூலம் ஊழல் செய்துள்ளது திமுக!” – பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல்...

இந்தியாவிலேயே முதன்முறையாக AI மூலம் ஊழல் செய்துள்ளது திமுக!” – பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கடும் குற்றச்சாட்டு; சிறப்புக் குழு அமைத்து விசாரணை!

-

- Advertisement -

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைகேடு நடைபெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இந்தியாவிலேயே முதன்முறையாக AI மூலம் ஊழல் செய்துள்ளது திமுக!” – பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கடும் குற்றச்சாட்டு; சிறப்புக் குழு அமைத்து விசாரணை!

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே முதன்முறையாக AI மூலம் ஊழல் செய்துள்ளது திமுக என்று விமர்சித்தார். அகல்விளக்கு பதிப்பகத்திற்கு முந்தைய திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதாகவும், போலியான பெயர்களில் AI தொழில்நுட்பம் மூலம் புத்தகங்கள் எழுதப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

we-r-hiring

மேலும், AI மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தகங்களை ரூ.50 கோடி மதிப்பில் பல்வேறு நூலகங்களுக்குக் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் திமுகவினர் மறுக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிய அமைச்சர், குப்பைகளைவிட மோசமான புத்தகங்களை வாங்குவதற்கு திமுக அரசு கொள்முதல் ஆணை வழங்கியுள்ளதாக விமர்சித்தார்.

பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாகச் சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

திமுக மீது பழி போடுவதில் தோல்வியடைந்துவிட்டீர்கள் முதலமைச்சர் விஜய் அவர்களே!” – பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் தவெக அரசுக்கு பரந்தாமன் சரமாரி கேள்வி!

MUST READ