spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

மீண்டும் உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

-

- Advertisement -

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,825-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையில் ஒரு கிராம் ரூ.100-க்கும் பார் வெள்ளி ரூ.100,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

MUST READ