

சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு 160 ரூபாயும், கிராமுக்கு 20 ரூபாயும் குறைந்துள்ளது.
சென்னையில், ஒவ்வொரு நாளும் தங்கம் விலை மாற்றத்தை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்தது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்தது. அதன்படி நேற்று தங்கம் ஒரு சவரன் ரூ.46,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,870க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசாவும், கிலோவுக்கு 300 ரூபாயும் குறைந்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 46,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5,850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 78,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


