சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.47,520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்தது. இதேபோல் நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை சவரன் ரூ.46,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை 5,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ரூ.47,520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 80 பைசாக்கள் உயர்ந்து ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிலோவுக்கு 800 ரூபாய் உயர்ந்து ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.