
சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்போர் கருப்பு உடை அணியத் தடையில்லை என்று பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

“தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி”- கே.எஸ்.அழகிரி பேட்டி!
பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் இன்று (ஜூன் 27) மாலை 06.00 மணிக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பெரியார் பல்கலைக்கழகத்தின் 21- ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் ஆளுநர் தலைமையில் நாளை (ஜூன் 28) சிறப்பாக நடைபெறவுள்ளது. அது சமயம், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதிச் செய்யுமாறும், கைபேசிகள் எடுத்து வருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல் துறையினர், அறிவுறுத்தலின் படி, இவ்வலுவலக சுற்றறிக்கையின் மூலம் ஜூன் 26- ஆம் தேதி அன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், மாணாக்கர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களது நலனைக் கருத்தில் கொண்டு மேற்காண் சுற்றறிக்கை நிர்வாகத்தால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
லியோ பட பாடல் விவகாரம் – நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்
இந்த சுற்றறிக்கை பெரியார் பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைத்தலைவர்கள், பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்ற கல்லூரிகளின் முதல்வர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.