
வரும் ஏப்ரல் 24- ஆம் தேதி வரை இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
“முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கவும்”- பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஏப்ரல் 24- ஆம் தேதி முதல் ஏப்ரல் 26- ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக உள் மாவட்டங்களின் சில இடங்களில் 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.
வரும் ஏப்ரல் 24- ஆம் தேதி வரை இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும். ஏப்ரல் 21- ஆம் தேதி முதல் ஏப்ரல் 24- ஆம் தேதி வரை வெப்பநிலை சற்றே குறைந்து சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸாக இருக்கும். இன்று முதல் ஏப்ரல் 23- ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்திய பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க்!
ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.