Homeசெய்திகள்தமிழ்நாடுதூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் சட்டசபையில் காரசாரம்! உதயநிதி எழுப்பிய கேள்வி.. அமைச்சர் கொடுத்த 'பஞ்ச்' பதில்!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் சட்டசபையில் காரசாரம்! உதயநிதி எழுப்பிய கேள்வி.. அமைச்சர் கொடுத்த ‘பஞ்ச்’ பதில்!

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தால் அவையில் காரசார விவாதம் ஏற்பட்டது.தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் சட்டசபையில் காரசாரம்! உதயநிதி எழுப்பிய கேள்வி.. அமைச்சர் கொடுத்த 'பஞ்ச்' பதில்!

பேரவையில் கேள்வி நேரம் மற்றும் மானியக் கோரிக்கை
தமிழக சட்டப்பேரவையில் இன்று (02-09-2026) பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. முன்னதாக அவை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குத் துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் கொண்டு வந்தனர்.

we-r-hiring

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது,  “ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இன்றோடு சேர்த்து தொடர்ந்து 15 நாட்களாகப் போராடி வருகிறார்கள்.

இப்போராட்டத்திற்கு நல்ல தீர்வு எட்டப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால் இதுவரை சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரைத் தூய்மைப் பணியாளர்கள் நேரடியாகச் சந்தித்து முறையிட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். எனவே, அவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் எப்போது நிறைவேற்றுவார்? அவர்களை நேரில் சந்தித்துப் பேசுவாரா?” என உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினாா்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் சட்டசபையில் காரசாரம்! உதயநிதி எழுப்பிய கேள்வி.. அமைச்சர் கொடுத்த 'பஞ்ச்' பதில்!

அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
இதற்குப் பதிலளித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்ததாவது, “தூய்மைப் பணியாளர்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயார் நிலையில் உள்ளது. ஆனால், அவர்கள் முன்வைக்கும் பிரதான கோரிக்கைகளில் நிர்வாகச் சிக்கல்கள் மட்டுமின்றி, நிதிச் சார்ந்த சிக்கல்களும் உள்ளன. தற்போதைய நிதி நெருக்கடியையும் சமாளித்து தான் அரசை அரவணைத்துச் செல்கிறோம்.

மேலும் அங்குப் பல தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. அனைவரையும் ஒன்றுதிரட்டி வெகுவிரைவில் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தீர்வு காணப்படும். அதேநேரம், கடந்த ஆட்சிக் காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் 150 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடினார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” என ராஜ்மோகன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளாா்.

அவையில் தொடர்ந்த காரசார விவாதம்
அமைச்சரின் பதிலைத் தொடர்ந்து மீண்டும் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஆட்சியில் 100 நாட்களுக்கு மேல் போராட்டம் நடந்ததாக அமைச்சர் கூறுகிறார். அப்படியென்றால் நீங்களும் 100 நாட்களைத் தாண்டும் வரை காத்திருக்கப் போகிறீர்களா? முந்தைய ஆட்சியில் போராட்டம் நடந்தபோது அமைச்சர்களும், மேயரும் நேரில் சென்று தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்துப் பேசினர். ஆனால், தற்போதைய ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட போராட்டக் களத்திற்குச் சென்று அவர்களைச் சந்திக்கவில்லை. ஆட்சியில் இல்லாதபோது அவர்களைச் சந்திக்கத் தயாராக இருந்த தற்போதைய முதலமைச்சர், இப்போது சந்திக்க மறுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் சட்டசபையில் காரசாரம்! உதயநிதி எழுப்பிய கேள்வி.. அமைச்சர் கொடுத்த 'பஞ்ச்' பதில்!

இதற்குப் மீண்டும் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை இரண்டு முறை எனது அறைக்கே அழைத்து வந்து விரிவாகப் பேசியவன் நான். முந்தைய ஆட்சியில் அவர்கள் போராடியபோது ரிப்பன் மாளிகைக்குள் கூட அனுமதி மறுக்கப்பட்டு, நடைபாதையில் அமர்ந்து போராடும் சூழலே இருந்தது. ஆனால், தற்போதைய ஆட்சியில் ரிப்பன் மாளிகைக்குள் ஜனநாயகப்பூர்வமாகப் போராட அனுமதி அளித்துள்ளோம். எனவே, இந்த விவகாரத்தில் வெகுவிரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளாா். மேலும், அமைச்சரின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்த விவாதம் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்பாசமுத்திரம் மக்களுக்குச் சேவையாற்ற மீண்டும் எம்.எல்.ஏ வேண்டும்!” – இசக்கி சுப்பையா அதிரடி பேட்டி 

MUST READ