spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஹெரிடேஜ் மியூசியத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஹெரிடேஜ் மியூசியத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

ஹெரிடேஜ் மியூசியத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN GOVT

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 07) சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் உபயோகத்தில் இருந்த பழைய மற்றும் காலத்திற்கேற்ப மாறிய திரைப்படத் தயாரிப்புக் கருவிகளையும், மிகப் பழமையான பாரம்பரிய மிக்க கார்கள் மற்றும் இரு சக்கர வண்டிகளையும் கொண்ட ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தைத் திறந்து வைத்தார்.

we-r-hiring

கொள்ளிடத்தில் 25 மணல் குழிகள் திறக்கப்படுவது சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கு பேராபத்து- ராமதாஸ்

இந்த நிகழ்வின் போது, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் எம்.சரவணன், எம்.எஸ்.குகன், கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட நடிகர்கள் கமல்ஹாசன், சிவக்குமார், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஹெரிடேஜ் மியூசியத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN GOVT

கடந்த 1945- ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து திரைத்துறையில் பயன்படுத்திய கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ