2024ஆம் ஆண்டிற்கான மாநில பல்கலைக்கழகங்களில், சிறந்த பல்கலைக் கழகத்திற்கான தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக் கழகம் இடம்பிடித்துள்ளன.
2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்துள்ளது. பட்டியலில் ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி முதலிடமும் பிடித்துள்ளது.

மாநில பல்கலைக்கழகங்களில் சிறந்த பல்கலைக்கழகங்கள் வரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடமும் , கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 8வது இடத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இன்னோவேட்டிவ் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகம் 10 வது இடத்தை கைப்பற்றியுள்ளது. இதேபோல், நாட்டின் சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணா அம்மாள் பெண்கள் கல்லூரி 7-வது இடத்தையும், சென்னை லயோலா கல்லூரி 8-வது இடத்தையும் பிடித்துள்ளன.