Homeசெய்திகள்தமிழ்நாடுமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: முஸ்லிம் மக்களின் ஆதரவு திமுகவுக்கே – அப்துல் காதர்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: முஸ்லிம் மக்களின் ஆதரவு திமுகவுக்கே – அப்துல் காதர்!

-

- Advertisement -

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் திமுகவிற்கு தான் என இந்திய தேசிய லீக் கட்சி பொதுச் செயலாளர் தி.மு.அப்துல் காதர் தெரிவித்தார்.

we-r-hiring

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர் அகமது, பொது செயலாளர் அப்துல் காதர் மற்றும் இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் சந்தித்து மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேசிய லீக் கட்சி பொதுச் செயலாளர் தி.மு.அப்துல் காதர், சிறுபான்மை மக்களின் காவலராக இருந்து வரும் இயக்கம் திமுக என்றும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் திமுகவிற்கு தான் என கூறினார்.

முஸ்லிம் மக்கள் என்றும் திமுகவுடன் நட்புடன் உள்ளதாகவும் இன்று நடைபெறக்கூடிய ஆட்சியும் காட்சியும் முடியும் சூரியன் உதயம் என தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது!

MUST READ