இந்திய கடற்படைக்கு சொந்தமான சிந்து கேசரி நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கட்டபொம்மனுக்கு சொந்தமான சிந்து கேசரி என்ற நீர்மூழ்கி கப்பல் நேற்று வந்துள்ளது. 72.25 மீட்டர் நீளமும், 12.8 மீட்டடர் அகலமும், 7.1 மீ உயரமும் கொண்ட அக்கப்பலின் மொத்த எடை 2442 டன் ஆகும். சிந்து கேசரி நீர்மூழ்கி கப்பல் கடந்த 31 ம் தேதி துாத்துக்குடி துறைமுகத்துக்கு வந்ததாகவும், வரும் 6ஆம் தேதி வரை இங்கு நிறுத்தபட உள்ளதாகவும் துறைமுக அதிகாரிகள் கூறினர்.

சிந்து கேசரி நீர்மூழ்கி கப்பல் ரோந்து பணியில் இருக்கும்போது 21 நாட்களுக்கு ஒரு முறை அருகேயுள்ள துறைமுகத்துக்கு செல்வது வழக்கம். அதன்படி, கப்பலுக்கு தேவையான எரிபொருள், ஊழியர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு வந்துள்ள நீர்மூழ்கி விரைவில் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் என்றும், மற்ற நடவடிக்கைகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறினர்.