தமிழ்நாடு முதலமைச்சர் “அப்பா” நிதி உதவி வழங்கி ஊக்குவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு முத்தமிழ்ச்செல்வி நன்றி தெரிவித்தார்.
உலகின் ஏழுகண்டங்களில் உயரமான சிகரங்களை (2 ஆண்டு 25 நாட்களில்) குறுகிய காலத்தில் ஏறி இந்தியவின் முதல் பெண் என்கிற சாதனை புரிந்து சென்னை திரும்பிய விருதுநகரை சேர்ந்த முத்தமிழ்ச் செல்விக்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் நண்பர்கள், பள்ளி மாணவர்கள் ரோஜா பூக்களை கொடுத்தும், சாதனை பட்டியல்களை பதாகைகளாக ஏந்தியவாறு முத்தமிழ்ச்செல்விக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தமிழ்நாடு ரெட்டி நல சங்கத்தின் மாநில தலைவர் ரவி, மாநிலப் பொதுச் செயலாளர் பூர்ணசந்திரன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மலையேற்ற சாதனை பெண்மணி முத்தமிழ்ச்செல்வி:- ”நிறைய வலிகளை தாங்கி உலகின் ஏழுகண்டங்களின் உயரமான சிகரங்களை மிக குறைந்த நாட்கள் (2 ஆண்டு, 25 நாட்களில்) ஏறி இந்திய பெண் என்கிற சாதனையை படைத்துள்ளேன். இதற்கு தமிழக முதலமைச்சராக உள்ள “அப்பா” நன்றியை தெரித்துக்கொள்கிறேன். என்னை மட்டும் அல்லாமல் தமிழக கடைக்கோடி பெண்ணையும் சாதனையாளராக உருவாக்குகிறார்.
மலையேற்றம் என்பதே தெரியதபோது ஊக்கம் அளித்து நிதி உதவி செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நிதி உதவி அளித்தவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிதுகொள்கிறேன்.
ஐய்யா அப்துல் கலாம் சொன்ன வார்த்தையான “பிறப்பு என்பது சாம்பவம் இறப்பு என்பது சரித்திரமாக இருக்கவேண்டும்” “வெற்றி என்பது தனக்கானது அல்ல மற்றவர்களை உருவாக்க” என்பதை நினைவு கொள்கிறேன். என் சாதனைகள் இன்னும் தொடரும் மற்ற துறைகளிலும் ஈடுபாடு கொண்டுள்ளேன் இனி சாதனை புரிந்துவிட்டு சொல்கிறேன் என்றார்.
அதுபோல் இன்றய மாணவர்கள் செல்போன், சொகுசு வாழ்கை என குறுகிய வட்டத்தில் வாழ பழக கூடாது மலையேற்றம் உள்ளிட்ட பசி, குளிர், தொலை தொடர்பு இல்லா இயற்கை பகுதிகள் என கடந்து தங்களின் வலிமையையும் மன தைரியத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு தைரியமாக எதிர்கொள்ளும் இளைஞர்கள் தான் எல்லை காக்கும் ராணுவத்தினர் உள்ளிட்ட பல்துறைகளில் நாட்டிற்காக சேவை செய்திட முடியும் என்றார்.
நெருக்கடி தரும் அமித்ஷா! நெருப்பு வளையத்தில் எடப்பாடி! குபேந்திரன் நேர்காணல்!