spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…

குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…

-

- Advertisement -

திருபுவனத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சீமான் பேட்டி அளித்துள்ளாா்.குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்த வந்த இடத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய குடியரசு கட்சித் தலைவர் சே.கு தமிழரசன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, புரட்சித் தமிழகம் பேரவை மூர்த்தி ஆகியோர் சந்தித்து ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டனர். அதன் பின்னர் புரட்சித் தமிழகம் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்து இயக்கத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி வைத்தார். பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…இந்த செய்தியாளர் சந்திப்பின் போது உடன் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உடன் இருந்தார். செய்தியாளர் சந்திப்பு சீமான், தமிழ் இனத்தின் அடையாளமாக விளங்கும் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை இனி வரும் காலங்களில் பறையர் எழுச்சி நாளாக அரசு அறிவித்து போற்ற வேண்டும். மாபெரும் மூன்று கோரிக்கை முன்வைத்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்திருக்கிறோம். சமூக நீதி என்றால் என்ன என்று விளக்கம் சொல்லிவிட்டு பிறகு சமூகநீதி என பெயர் வைத்து அழைக்கலாம். ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க என்ன பிரச்சனை? ஒரே வீட்டில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என இரண்டு முதன்மை அமைச்சர்கள் இருக்கிறார்கள். இது என்ன சமூக நீதி? சனாதானத்தை வீட்டில் வைத்துக்கொண்டு, ரோட்டில் வந்து ஒழிப்பேன் என்று சொல்வது யாரை ஏமாற்றும் வேலை?குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…இந்த நாட்டில் எண்ணற்ற பெரியவர்கள் உள்ளனர். அனைத்திற்கும் கருணாநிதி என பெயர் வைக்கிறார்கள். அவர் பெயரை விட்டால் வேறு பெயர் இல்லையா? பெரியாரைத் தந்தை என்று சொன்ன போதும் தலையாட்டிக் கொண்டிருந்த தமிழ் சமூகம், கருணாநிதியை தமிழ் கடவுள் என்று சொல்லும் போது தலையாட்டிக் கொண்டிருக்கிறது. இதை சகித்து கொண்டிருக்கும் மானுட கூட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆறடி அதிகபட்சமாக 60 அடியில் இருக்கலாம், ஆனால் இரண்டு, இரண்டு ஏக்கரில் திராவிட தலைவர்கள் படுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் விடுதலைக்கு தூக்கில் தொங்கினார்களா? செக்கு எழுத்தார்களா? என்ன செய்தார்கள்?

திருபுவனத்தில் நாளை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியை கொடுத்து விட்டு, பின்னர் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. அனுமதி தான் கேட்கிறோமே தவிர பாதுகாப்பு கேட்கவில்லை.  பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கூறும் காவல்துறை அஜித்தை முறையாக விசாரித்து இருக்கலாம். இந்த அணுகு முறையை அஜித்திடம் காட்டி இருக்கலாம். நாளை குறித்த படி ஆர்ப்பாட்டம் நடக்கும். எங்கேயாவது நின்று நிச்சயமாக எங்களது கண்டனத்தை பதிவு செய்வோம். மொட்டை மாடியில் நின்றாவது ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…திராவிட கட்சிகளுடன் எந்த காலத்திற்கும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னோம். இதுவரை கடைபிடித்து வருகிறோம். நான்கு முறை தோல்வி அடைந்தாலும், ஐந்தாவது முறை தேர்தலில் போட்டியிடுகிறோம். 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். நாங்கள் அரசியல் விடுதலைக்கு நிற்பவர்கள், அரசியல் வியாபாரத்திற்கு அல்ல. இரண்டுக்கும் தூரம் அதிகம். குடமுழுக்கு என்ற வார்த்தைக்கு நன்னீராட்டு என்று சொல்லை தமிழக அரசு தற்போது தான் கற்றுக் கொள்கிறது. என்ன கொடுமை? இது காலக்கொடுமை.

we-r-hiring

மலேசியா நாட்டில் எங்கள் முருகனை தமிழ் கடவுள் என்கிறார்கள். அப்போது சிவன், விநாயகர் வேறு கடவுள்களா? ஜெகன்மூர்த்தி ஒப்புக்கொண்டால் எல்லோரும் ஒன்றாக ஓர் அணியில் நிற்போம். ஒரு சீட்டிற்காக கூட்டணிக்கு செல்லாமல் பூவை ஜெகன்மூர்த்தி ஒப்புக் கொண்டால் தனியாக தேர்தலை சந்திக்க தயார். அவர் என்னுடன் இருப்பாரோ இல்லையோ அவருடன் நான் இருப்பேன் என சீமான் கூறினார்.

செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? அமைச்சர் அன்பில் மகேஷ் உரை

MUST READ