செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? தமிழ் நமது அடையாளம், ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு. வாய்ப்புக்காக நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளாா்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித்துறையின் தனியார் பள்ளிகள் இயக்கம் சார்பாக நடைபெற்ற தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டபேரவையில் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின் போது CBSE மற்றும் ICSE உள்ளிட்ட பிற வாரிய பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி 6000 ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 3,565 தமிழ் ஆசிரியர்களுக்கு இன்று புத்தாக்க பயிற்சி தொடங்கப்பட்டது.
இந்த புத்தாக்கப் பயிற்சி விழா மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமக்கு இன்பம் தரும் கல்வி மற்றவருக்கும் இன்பம் தரும் என்பார் கலைஞர் அவர்கள். தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கணம், செய்யுள், பாடப்பொருள், உரைநடை, மதீப்பீடு உள்ளிட்ட 5 தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நேற்று திருச்சியில் தொடக்கக் கல்வித்துறை சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. இன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றுள்ளேன். அரசு பள்ளி மற்றும் அரசு ஆசிரியர்கள் மட்டுமல்ல, தனியார் மாணவர்களும் தனியார் ஆசிரியர்களும் எங்கள் ஆசிரியர்கள் தான் அவர்களும் நம்முடைய பிள்ளைகள் தான் என்பது போல் தான் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டம் நடைபெறும் இடம் இரு மொழி கொள்கையை உயர்த்திப்பிடித்து சட்டமாக்கிய அண்ணா பெயரில் உள்ள நூலகத்தில் நடைபெறுவது பெருத்தமானதாக உள்ளது.
கடந்த ஆண்டும் இது போன்று பயிற்சிகள் வழங்கப்பட்டது. நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான தான் இந்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்றயை காலகட்டத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாம் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இன்று நம்மை விட AI யிடம் குழந்தைகள் நிறைய விஷயத்ததை தெரிந்து கொள்கிறார்கள்.
ஆனால் பள்ளியில் நின்று ஆசிரியர் நடத்துவது போல் வராது. தமிழ் மொழி இல்லை என்றால் நாம் நம்மை மறந்துவிடுவோம். நமது கலச்சாரம் பண்பாடு எல்லாம் மொழியில் உள்ளது. கீழடி அகழ்வாரய்ச்சி அதற்கு சான்று, 5300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பை பயன்படுத்தி இருக்கிறார்கள் தமிழன் என்று பெருமையை நாம் பார்த்து இருக்கிறோம்.செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு?, தமிழ் நமது அடையாளம்,ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு. வாய்ப்புக்காக நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அரசு பள்ளிகளில் தமிழ் கற்பிப்பது போல தனியார் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. நமக்கான வாய்ப்பு உள்ளது என்றால் நாம் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 8 ல் உள்ள 22 மொழிகளையும் கற்கலாம் அதில் எந்த தவறும் இல்லை. நமது மொழியை உயர்த்தி பிடிப்பதற்கு உரிய பொறுப்பும் கடமையும் நம்மிடம் உள்ளது. நமது மாணவர்கள் நாம் யார் என்று தெரிந்து கொள்வதற்கு நமது மாநிலத்தின் மொழியை கற்க வேண்டும் நமது அடையாளத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சி தொடங்கும் போது செல்போனை உயர்த்தி புடிக்கும் நாம் செம்மொழியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தனியார் பள்ளிகள் இயக்குநர் குப்புசாமி, தனியார் பள்ளியின் இணை இயக்குநர் சுகன்யா மற்றும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணை தலைவர் முத்துகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தமிழாசிரியர்கள் இந்த புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் எந்த அரசும் நிறைவேற்ற முடியாது-திருமாவளவன்