spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் - செல்வப்பெருந்தகை

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் – செல்வப்பெருந்தகை

-

- Advertisement -

சென்னை கண்ணகி நகரில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் தூய்மை பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தி என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளாா்.மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் - செல்வப்பெருந்தகைமேலும், இது குறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது, “அன்றாடம் மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைக்கும் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பே நகரின் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால், இவ்வாறு உயிரிழப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. இக்கஷ்டநேரத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.

மாநகராட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இனி இத்தகைய துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளாா்.

சென்னை மாநகராட்சி  உதவி ஆணையர் என அம்பத்தூரில் தனியார் நிறுவனங்களில் வசூல் வேட்டை

we-r-hiring

MUST READ