- Advertisement -
திருவாரூர் மாவட்டம் மேல்கொண்டாழி கிராமத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிராமத்தில் வீட்டின் முன்பு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை அஜ்மல் பாஷாவை வெறிநாய் கடித்துள்ளது. பேரன் அஜ்மல் பாஷாவை காப்பாற்ற முயன்ற போது பாட்டி சுல்தான் பீவியையும் வெறிநாய் கடித்துள்ளது. இந்த தாக்குதலில் குழந்தையும் பாட்டியும் காயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். வெறிநாயின் தாக்குதலால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
