spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉளவியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள்! பாதுகாக்க குழுக்கள்…தமிழக அரசு முடிவு…

உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள்! பாதுகாக்க குழுக்கள்…தமிழக அரசு முடிவு…

-

- Advertisement -

கொடுங்குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டி விதிமுறைகளை வகுக்க பல்வேறு துறைகள் அடங்கிய குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள்! பாதுகாக்க குழுக்கள்…தமிழக அரசு முடிவு…கோவையில், சகோதரியை, அவரது எட்டு வயது மகளின் கண்ணெதிரே, கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து, சகோதரர் சரவணகுமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான எட்டு வயது குழந்தையின் சாட்சியத்தின் அடிப்படையில் சரவணகுமாருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாய் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த எட்டு வயது குழந்தையின் மனநிலையைச் சுட்டிக்காட்டி, இதுபோன்ற கொடூர குற்ற வழக்குகளில் சாட்சிகளாக சேர்க்கப்படும் குழந்தைகளின் கவுன்சலிங் வழங்குவதற்கு உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கொடுங்குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகளின் மனநலனை கண்டறியவும், அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும்,  காவல் துறையினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான விதிமுறைகளை வகுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

மேலும், இதுசம்பந்தமாக, உள்துறை செயலாளர் தலைமையில், சமூக நலத்துறை செயலாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐ.ஜி, மனநல மருத்துவமனை இயக்குநர், சட்டத்துறை கூடுதல் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் நடத்தப்பட்டதாகவும், இந்த கூட்டத்தில், கொடுங்குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டி விதிமுறைகளை வகுக்க பல்வேறு துறைகள் அடங்கிய குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து விரைவாக வழிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

MUST READ